×

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம்

 

திருப்பூர், டிச.9: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகின்ற 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைகளுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் திருப்பூரில் தங்கி உள்ள வெளி மாவட்ட மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க விடுமுறை நாளான நேற்று கடை வீதிகளில் திரண்டிருந்தனர். திருப்பூர் காமராஜ் சாலை,புது மார்க்கெட் வீதி,காதர் பேட்டை,மாநகராட்சி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.

குறிப்பாக கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தங்களுக்கு தேவையான புத்தாடை, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான கிறிஸ்துமஸ் மரம் ,ஸ்டார்,வண்ண நிற பலூன்கள் உள்ளிட்டவை ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். விடுமுறை நாளான நேற்று திருப்பூர் மாநகரின் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் தங்கள் விடுதிகளில் தங்கி உள்ள வடமாநில தொழிலாளர்களை பேருந்துகளில் அழைத்து வந்திருந்தனர். மாநகராட்சி சந்திப்பு அருகே அவர்களை இறக்கி விட்ட நிலையில், நாள் முழுவதும் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மாலை மீண்டும் விடுதிக்கு சொந்தமான பேருந்துகளிலேயே சென்றனர். இதன் காரணமாக புது மார்க்கெட் வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நேற்று வழக்கத்தைவிட பொதுமக்களின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

The post கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Christmas ,New Year ,Tirupur ,English New Year ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை ஒட்டி...