×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் 2 விசை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4-ம் தேதி 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாககூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீன்பிடி படகுகளை மீட்க வேண்டும், மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ராமேஷ்வரம் மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுக மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 2 விசைப்படகுகளுடன் கைதான மீனவர்கள் காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பின் தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Ramanathapuram ,Ramanathapuram District Hall ,Neduntivu ,Rameshwar ,Sri Lanka Navy ,Dinakaran ,
× RELATED நடுக்கடலில் 2 விசைப்படகுகளுடன்...