- சட்டமன்ற உறுப்பினர்
- அரியலூர் அரியலூர்
- அம்பேத்கர்
- அரியலூர் செட்டி ஏரி
- சட்டமன்ற சபை
- சின்னப்பா
- மத்யா
- பிரதேசம்
- மாவட்டம்
- ராமநாதன்
- மத்திய பிரதேச ஒன்றியம்
- ஷங்கர்
- மத்தியப் பிரதேசம்
- அரியலூர்
அரியலூர், டிச. 7: அரியலூர் செட்டி ஏரிக்கரையிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை ெசலுத்தினர். நிகழ்ச்சிக்கு, சட்டப் மன்ற உறுப்பினர் சின்னப்பா தலைமை தாங்கினார். மதிமுக மாவட்டச் செயலர் ராமநாதன், மதிமுக ஒன்றியச் செயலர் சங்கர், மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஏஐடியுசி மாவட்டச் செயலர் தண்டபாணி தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் பாண்டியன், நகர கிளைச் செயலர் துரைராஜ் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவத்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் நகரத் தலைவர் சிவகுமார் தலைமையிலான நிர்வாகிகளும் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், திருமானூர், செந்துறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அம்பேத்கர் சிலைகளுக்கும், படங்களுக்கும் மேற்கண்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
The post அரியலூரில் அம்பேத்கர் சிலைக்கு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.