- பாஜக
- மதுரை எம்.பி.
- சு வெங்கடேசன்
- சென்னை
- மதுரை
- வெங்கடேசன்
- மத்திய அரசின் ஊழியர் நலன் மற்றும் பயிற்சி அமைச்சகம்
சென்னை :தரவுகளை கைவிடுதலே பாஜகவின் தந்திரம் என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒன்றிய அரசின் ஊழியர் நலன் மற்றும் பயிற்சி அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் வழக்கமாக பிரிவு 1 முதல் 4 வரையிலான மொத்த ஊழியர் எண்ணிக்கை அவர்களில் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி ஊழியர்கள் எண்ணிக்கை தரப்படும். ஆனால் 2023 – 24 இல் அந்த விவரங்கள் தரப்படவில்லை. விவரங்களை தந்தால் இட ஒதுக்கீடு நிலுவை காலியிடங்கள், மீறல்கள் என்ற கோரிக்கைகள், விமர்சனங்கள் வரும். ஆகவே அந்த விவரங்களையே தூக்கி விட்டார்கள்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post தரவுகளை கைவிடுதலே பாஜகவின் தந்திரம் : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் பதிவு appeared first on Dinakaran.