×

ஒன்றிய ஆயுதப்படையில் 1 லட்சம் காலியிடங்கள்: உள்துறை அமைச்சகம் தகவல்


புதுடெல்லி: மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு: மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த செப்டம்பர் 30ம் தேதி கணக்குப்படி இருபடைகளின் மொத்த பலம் 9,48,204 ஆக இருந்தது. காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

730 வீரர்கள் தற்கொலை
கடந்த 5 ஆண்டுகளில் 730 மத்திய ஆயுதப் படையினர், தேசிய பாதுகாப்புப் படையினர், அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

The post ஒன்றிய ஆயுதப்படையில் 1 லட்சம் காலியிடங்கள்: உள்துறை அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Armed Forces ,Home Ministry ,New Delhi ,Union Minister of State ,Home ,Nithyanand Roy ,Rajya Sabha ,Central Armed Police Force ,Assam Rifles ,Ministry of Home Affairs ,Dinakaran ,
× RELATED ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த என்சிபி...