×

ஈரோட்டில் 180 மி.மீ மழை பொழிவு

 

ஈரோடு, டிச.4: ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்ஜல் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதில், ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் காலை மற்றும் இரவு லேசான மழை பெய்தது. இதேபோல், மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதில், மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மி.மீ வருமாறு:

ஈரோடு-9.30, மொடக்குறிச்சி-13, கொடுமுடி-6, பெருந்துறை-6, சென்னிமலை-7, பவானி-7.60, கவுந்தப்பாடி-3.80, அம்மாபேட்டை-20.20, வரட்டுப்பள்ளம் அணை-4, கோபி-10.20, எலந்தகுட்டை மேடு-11.20, கொடிவேரி அணை-5, குண்டேரிப்பள்ளம் அணை-9.20, நம்பியூர்-33, சத்தி-5, பவானிசாகர் அணை-6.80, தாளவாடி-23.20 என மாவட்டத்தில் மொத்தம் 180.50 மி.மீ மழை பொழிந்தது. இது மாவட்டத்தின் சராசரி மழையளவு 10.62 மில்லி மீட்டர் ஆகும்.

The post ஈரோட்டில் 180 மி.மீ மழை பொழிவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,North East Monsoon ,Benjal ,Dinakaran ,
× RELATED மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது