×

மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி, டிச.3: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநகர மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு தங்கள் பகுதி தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர், அவற்றை அதிகாரிகளிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், துணை மேயர் திவ்யா, மண்டத் தலைவர்கள் துர்காதேவி, ஜெயநிர்மலா, விஜயலட்சுமி, துணை கமிஷனர் பாலு, நகரப்பொறியாளர் சிவபாதம், நகர் நல அலுவலர் விஜய்சந்திரன், செயற்பொறியார்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,People's Day ,Trichy Municipal Office ,Mayor ,Anbhakan ,Municipal Commissioner ,Saravanan ,Dinakaran ,
× RELATED திருச்சி மாநகரில் முக்கிய சாலைகளை...