- அமைச்சர்
- கோவி
- செஜியன்
- சென்னை
- உயர்
- கோவி
- தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில்
- சென்னை பல்கலைக்கழகம்
- சேப்பாக், சென்னை
- சேஹ்யன்
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் “விளைவுகள் அடிப்படையிலான கல்வி” குறித்த பயிலரங்கை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் கோவி செழியன் அளித்த பேட்டி: முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டுக்குள் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5000 உயர்த்தி 25,000ஆக சம்பளம் உயர்த்தினார்.
மேலும், கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பள நிதியாக யூஜிசி ஒரு ஆண்டுக்கு ரூ. 40 கோடி தர வேண்டும். இந்த நிதியை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கேட்டு வருகிறது. 2017ல் நிறுத்தப்பட்ட இந்த தொகை இதுவரை வழங்கப்படவில்லை. ஆனாலும் கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து அவர்களுக்கு பணியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
கூடுதல் கவுரவ விரிவுரையாளர்களை விரைவில் உருவாக்க இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து நிரந்தர பேராசிரியர்களை உருவாக்க முன் முயற்சியை உயர்கல்வித்துறை எடுத்து வருகிறது. யுஜிசி நடைமுறையை பின்பற்றுவதில் எந்த பின்னடைவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post அமைச்சர் கோவி.செழியன் தகவல் கூடுதல் கவுரவ விரிவுரையாளர் நியமிக்கப்பட உள்ளனர் appeared first on Dinakaran.