×

கண்களில் கருப்புத் துணி கட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, டிச. 3: ஈரோடு மாவட்டம், ஒலகடம் பேரூராட்சி, 10வது வார்டு பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தினர் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது, வாய், கண்களை கருப்பு துணியால் கட்டி கொண்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.அப்போது அவர்கள் கூறியதாவது: ஒலகடம் பேரூராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு பகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த நாங்கள் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு குடியிருக்க பட்டா கோரி, பல ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, தற்போது வாய்,கண்களை கருப்பு துணியால் கட்டி, மனு கொடுக்க வந்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். அவர்கள் கருப்பு துணி கட்டி, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாததால், ஈரோடு தெற்கு போலீசார் அவர்களை தடுத்து, 56 பேரை கைது செய்தனர்.

The post கண்களில் கருப்புத் துணி கட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Adi Dravidian ,Olagadam Municipality ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியில் SC , ST மக்களின்...