×

பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி

 

அந்தியூர்,டிச.3: அந்தியூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான சதுரங்க போட்டி நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் தலைமையில் பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினர். இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், ஒன்றிய துணைச் செயலாளர் நாகேஸ்வரன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் செபஸ்தியான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி appeared first on Dinakaran.

Tags : Anthiyur ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,DMK Sports Development Team ,
× RELATED சென்னை என்றால் செஸ் என்பதை மீண்டும்...