×

மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே மோட்டார் சுவிட்ச் ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோட்டு (34). குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் தங்கி, பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தார்.

இவர், நேற்று காலை தங்கியிருந்த அறையில் மோட்டார் சுவிட்ச் ஆன் செய்தார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சோட்டு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார், சோட்டுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : North state ,Kunradthur ,Chotu ,Jharkhand ,Thirumudivakkam ,North ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி கடலில் மிதந்த சுற்றுலா பயணி உடல் அடையாளம் தெரிந்தது