×

அரசு ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்: கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நலக் குழு புதியதாக அமைக்க வேண்டி உள்ளதால் உறுப்பினர் தேர்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலமக்களின் வளர்ச்சிக்காக பாடுபட விருப்பமுள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் 25ம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ மனு அளிக்கவும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

 

The post அரசு ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Govt Adi Dravidar Welfare Committee ,Thiruvallur ,T. Prabhu Shankar ,Government Adi Dravidian Welfare Committee ,Adi Dravidar ,Adi Dravidar welfare committee ,
× RELATED டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க...