×

மயிலாடுதுறையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி: காவல்துறை மறுப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வெளியான செய்திக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் என்பவரது 20 வயதான மகன் அபிநாத். இவருக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய அபிநாத் என்பவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த சிறுமி போலீசில் புகார் தெரிவித்தார். சிறுமி, அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை மகளிர் போலீசார் அபிநாத்திடம் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் சிறுமியை பாலியல் ரீதியில் அபிநாத் துன்புறுத்தியது தெரிய வந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர். பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருந்த அபிநாத் நண்பர்கள் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை காலத்தில் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் மயிலாடுதுறை எஸ்.பி. வேண்டுகோள் விடுத்தார்.

The post மயிலாடுதுறையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி: காவல்துறை மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladu ,Mailadudhara ,Mayiladudhara ,ABINATH ,AMRITLINGAM ,MAYILADUDURA DISTRICT TOWN STATION ROAD ,STREET ,
× RELATED மயிலாடுதுறையில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: காவல்துறை மறுப்பு