×
Saravana Stores

நோயாளிகள் அமர இருக்கை வசதி

திருச்செங்கோடு, நவ.30: திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு, தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அனுமதி சீட்டு வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கு போதிய இருக்கை வசதியும் இல்லை. இதனால் கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியோர்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில், கடந்த 26ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மருத்துவமனையில் நோயாளிகள் அமர இருக்கை வசதியும், குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டது. தலைமை மருத்துவமனைக்கு ஈடாக புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிட பணிகள் நிறைவுற்றால், நோயாளிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும் என மருத்துவ அலுவலர் டாக்டர் மோகனபானு தெரிவித்தார்.

The post நோயாளிகள் அமர இருக்கை வசதி appeared first on Dinakaran.

Tags : Thiruchengode ,Tiruchengode Government Hospital ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது