×
Saravana Stores

ராசிபுரம் அருகே பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராசிபுரம், நவ.29: வெண்ணந்தூர் ஒன்றியம், ஆயிபாளையம் பால் சொசைட்டி முன்பு, பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ₹10 உயர்த்தி வழங்கி, பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ₹45ம், எருமை பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ₹54 வழங்க வேண்டும், மாட்டு தீவனத்தை 50 சதம் மானிய விலையில் வழங்க வேண்டும். ஆரம்ப சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பாலை கொள்முதல் செய்யும் இடத்திலேயே, பாலின் தரத்தையும் அளவையும் கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

The post ராசிபுரம் அருகே பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Ayipalayam Milk Society ,Vennantur Union ,
× RELATED ராசிபுரத்தில் தனியார் கல்லூரி பேருந்தில் திடீரென்று ஏற்பட்ட புகை