- சர்க்கரை ஆலை
- மோகனூர்
- மல்லிகா
- நிர்வாக இயக்குனர்
- மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை
- மோகனூர்-சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை
- தின மலர்
மோகனூர், நவ.29: மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக மேலாண்மை இயக்குநர் மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மோகனூர்- சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024-25ம் ஆண்டு கரும்பு அரவை பருவம், கடந்த 21ம் தேதி தொடங்கியது. இதுவரை 10ஆயிரம் டன் அரவை செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக தினசரி 2500 டன் கரும்பு அரவை திறனுடன் ஒரு லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கரும்பிற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக டன்னுக்கு ₹3151, தமிழக அரசின் கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது. எனவே, ஆலைக்கு கரும்பு பதிவு செய்யாமல் வைத்திருக்கும் மோகனூர், பாலப்பட்டி மற்றும் பரமத்திவேலூர் வட்டார கரும்பு அங்கத்தினர்கள், உடனடியாக ஆலையில் பதிவு செய்து கரும்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கு பதிவு செய்ய அழைப்பு appeared first on Dinakaran.