×

புதுக்கோட்டையில் பா.ஜ.க., அதிமுக நிர்வாகிகளின் வீடுகளில் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை சோதனை..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பா.ஜ.க., அதிமுக நிர்வாகிகளின் வீடுகளில் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதி அருகே உள்ள கடுக்காக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் இவர் தற்போது புதுக்கோட்டை பாஜக மாவட்ட பொருளாளராக உள்ளார். இவர் ஏற்கனவே புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளராக பணி புரிந்து வந்துள்ளார். இவரது வீடுகளில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையினர் பல்வேறு குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், தற்போது புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட சார்லஸ் நகரில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பது படையினர் பாதுகாப்போடு 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல், அதிமுகவில் எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளராக உள்ளார் பழனிவேல். இவர் முருகானந்தத்தின் சகோதரர் ஆனால் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக ஆட்சிகளில் நடந்த பல்வேறு முறைகேடுகளில் பழனிவேலுக்கு தொடர்பு உள்ளது என வழக்குப்பதிவு செய்து அவரது வீட்டிலும் ஏற்கனவே சோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது கடுக்காக்காடு கிராமத்தில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறையினர் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல் ஆலங்குடியில் இரு நபர்களுக்கும் தொடர்புடைய மற்றொரு நபர் பழனிவேல் என்பவரது வாடகை வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post புதுக்கோட்டையில் பா.ஜ.க., அதிமுக நிர்வாகிகளின் வீடுகளில் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ,Pudukottai ,Muruganandam ,Kadukkakkadu ,Vetenviduthi ,
× RELATED பாஜவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி?...