×
Saravana Stores

கொட நாடு வழக்கில் மர வியாபாரி சஜீவனிடம் சிபிசிஐடி விசாரணை


கோவை: ஜெயலலிதாவுக்கு சொந்தமாக கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான, கொடநாட்டில் மர வியாபாரம் செய்து வரும் சஜீவன் என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று கோவையில் உள்ள அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். கொடநாடு எஸ்டேட் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிமுகவினருடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிகிறது.

அரசியல் செல்வாக்கில் இவர் எஸ்டேட் பங்களாவில் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எஸ்டேட் பங்களாவில் கொலையான நபர் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பங்களாவில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரித்தனர்.

The post கொட நாடு வழக்கில் மர வியாபாரி சஜீவனிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBCID ,Sajeevan ,Koda Nadu ,Coimbatore ,Jayalalithaa ,Ooty court ,
× RELATED கொலை, கொள்ளை வழக்கு கொடநாடு பங்களாவை...