×
Saravana Stores

யமுனை ஆற்றில் நச்சு நுரை பெருக்கெடுப்பு அதிகரிப்பு: ஆற்றில் நச்சு நுரை அதிகரிப்பால் டெல்லி மக்கள் அச்சம்

டெல்லி: யமுனை ஆற்றில் நச்சு நுரை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது டெல்லியில் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் காற்று மாசு மற்றும் நீர் மாசு பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக ரசாயன கழிவுகள் காரணமாக யமுனை ஆற்றில் நச்சு நுரை பெருக்கெடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. டெல்லியில் காலிந்தி கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் யமுனை ஆற்றில் இன்றும் ரசாயன நுரை மிதந்து செல்கிறது.

வெள்ளை நிற பனிபடலமாக ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. யமுனையில் நீர் மாசின் அளவு அதிகரித்துள்ளதாலும், நச்சு நுரையாலும் ஆற்று நீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ரசாயன நுரையால் தோல் நோய்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதால் யமுனை ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றாத வகையில் போர்கால அடிப்படையில் ஒன்றிய அரசும், டெல்லி அரசும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post யமுனை ஆற்றில் நச்சு நுரை பெருக்கெடுப்பு அதிகரிப்பு: ஆற்றில் நச்சு நுரை அதிகரிப்பால் டெல்லி மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Yamuna River ,Delhi ,River ,
× RELATED வெள்ளை நிற பனிப்படலம் போல் யமுனை ஆற்றின் மேல் மிதக்கும் நச்சு நுரை!!