- எங்களுக்கு
- ஹைதெராபாத்
- சாய் தேஜா நுக்கரபு
- கம்மம்
- தெலுங்கானா
- இந்தியா
- சிகாகோ, அமெரிக்கா
- சிகாகோ
- அமெரிக்கா
ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியை சேர்ந்தவர் சாய் தேஜா நுக்கரப்பு(22). இந்தியாவில் பிபிஏ முடித்து விட்டு அமெரிக்கா,சிகாகோவில் எம்பிஏ படித்து வந்தார். இவர் சிகாகோவில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் அருகே ஒரு நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், மர்ம நபர்கள் அவரை சுட்டு கொன்று விட்டனர் என்று தெலங்கானா மாநில பிஆர்எஸ் கட்சி எம்எல்சி மதுசூதன் தத்தா நேற்று தெரிவித்தார். சாய் தேஜா தன்னுடைய நண்பருக்கு உதவி செய்வதற்காக அந்த நிறுவனத்திற்கு சென்றார். அப்போது இந்த சம்பவம் நடந்தது. அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக மதுசூதன் கூறினார்.
The post இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டு கொலை appeared first on Dinakaran.