×

சாலை புதுப்பிப்பு பணியை அதிகாரி ஆய்வு

நாமக்கல், நவ.28: நாமக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் சாலைகள் புதுப்பிக்கும் பணி, பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சேலம் கோட்ட தரகட்டுபாட்டு கோட்டபொறியாளர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதன்படி ராசிபுரம் தாலுகாவில், சாலை சந்திப்பு மேம்பாடு செய்யும் பணி மற்றும் தார்சாலைகள் புதுப்பிக்கும் பணி வெள்ளை பிள்ளையார் கோவில் மற்றும் முத்துக்காளிப்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ராசிபுரம் நீதிமன்றத்தில் இருந்து முத்துக்காளிப்பட்டி செல்லும் சாலை 1.20 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ42 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், மசக்காளிபட்டியில் இருந்து ஆட்டையாம்பட்டி செல்லும் சாலையில் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் சாலை சந்திப்பினை மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுபாடு கோட்ட பொறியாளர் கதிரேஸ் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சாலையின் தடிமன் மற்றும் தார் சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஜல்லிகலவையை அளவுகள் வாரியாக பிரித்து, தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார். அப்போது தர கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் தமிழரசி, உதவி பொறியாளர் கார்த்தி, ராசிபுரம் கட்டுமான மற்றும் பராமரிப்பு உதவிகோட்ட பொறியாளர் ஜெகதீஷ்குமார், உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post சாலை புதுப்பிப்பு பணியை அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Highways Department ,Salem ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி நகரில் சாலையோர கடைகளை...