×

வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆய்வு

திருச்செங்கோடு, டிச.4: நாமக்கல் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு உட்கோட்டத்தில் மாணிக்கம் பாளையம்- எலச்சிபாளையம் சாலையில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளது. சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைத்து பாலங்களிலும் வெள்ளநீர் அபாயகர அளவை தாண்டி செல்கிறது. இதையடுத்து, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இப்பாலத்தில் போக்குவரத்தை தற்காலிகமாக துண்டித்து அனைத்து வாகனங்களையும் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தினர். இப்பணியை நாமக்கல் கோட்ட பொறியாளர் திருகுணா நேரில் பார்வையிட்டார் அப்போது திருச்செங்கோடு உதவி கோட்ட பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் மோகன்ராஜ் உடனிருந்தனர்.

The post வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Varanadimuthar ,Manickampalayam-Elachipalayam road ,Namakkal Highway Department ,Salem district ,Swayamuthu river ,
× RELATED குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்