×

வீடு இடிந்து விழுந்தது

ராசிபுரம், டிச.4: ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட புதூர்மலையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(78). இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அவரது வீட்டின் சுற்றுச்சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

The post வீடு இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Arumugam ,Pudoormalaiyampatti ,Dinakaran ,
× RELATED ராசிபுரத்தில் தனியார் கல்லூரி பேருந்தில் திடீரென்று ஏற்பட்ட புகை