×
Saravana Stores

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நலமுடன் உள்ளார்: அப்போலோ மருத்துவமனை தகவல்

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நலமுடன் உள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெஞ்செரிச்சல் காரணமாக சக்திகாந்த தாஸ் நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சக்திகாந்த தாஸ் உடல்நிலை குறித்து கவலைப்பட தேவையில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் நெஞ்சு வலி காரணமாகச் சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவசர நிலை அல்ல என மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன, ஆனாலும் அவரது உடல் நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை ரிசர்வ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீட்டில் உறுதிப்படுத்தியுள்ளார். சக்திகாந்த தாஸ் அசிடிட்டி பிரச்சனையை எதிர்கொண்ட காரணத்தால் இன்று காலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரின் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணிப்பு செய்வதாக ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் கூறினார். தற்போது அவர் நலமாக உள்ளார், அடுத்த 2-3 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நலமுடன் உள்ளார்: அப்போலோ மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.

Tags : RBI ,Governor Shaktikanta Das ,Apollo Hospital ,CHENNAI ,Reserve Bank of India ,Apollo Hospitals ,Shaktikanta Das ,Apollo ,Shaktikanta Das' ,Reserve Bank ,Dinakaran ,
× RELATED ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ்...