×

தவலையில் சிக்கிய 5 வயது சிறுமி மீட்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகள் தவசூர்யா(5). இவர் நேற்று பக்கத்து வீட்டில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தவசூர்யா வீட்டின் முன் வைத்திருந்த பித்தளை தவலைக்குள் கால்களை விட்டு நின்றுகொண்டு விளையாடினாராம். பின்னர் மீண்டும் கால்களை வெளியே எடுக்க முடியாமல் அழுதுள்ளார். தவலையின் வாய் பகுதி குறுகலாக இருந்ததால் தவசூர்யாவின் கால்கள் சிக்கிக்கொண்டது. சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு வெளியே வந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தவலையில் சிக்கிய சிறுமியை மீட்க முயன்றனர். நீண்ட நேரமாக போராடியும் முடியவில்லை.

இதுகுறித்து சிவா செங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரம் போராடி கட்டர் மூலம் பித்தளை தவலையை துண்டித்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தவலையில் சிக்கிய 5 வயது சிறுமி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Sengam ,Melapalayam ,Thiruvannamalai district ,Tavasurya ,
× RELATED பித்தளை தவலையில் சிக்கிய 5 வயது சிறுமி...