- இறைவன்
- தர்கா கந்தூரி
- நாகப்பட்டினம் மாவட்டம்
- நாகப்பட்டினம்
- சந்தனம் பூஸ் வைபவம்
- நாகூர் இறைவன் காந்தூரி விழா
- பதுஷா
- தர்கா
- ஷாஹுல்
- of
- நாகூர்
- நாகை மாவட்டம்
- நாகப்பட்டினம் மாவட்டத்தின் நாகூர் அன்வர் தர்கா கண்டுரி திருவிழா 12வது உள்ளூர் விடுமுறை
- ஆட்சியாளர்
- தின மலர்
நாகப்பட்டினம்: நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு வரும் டிச.12ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் நாகூரில் நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் அமீது பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு 468வது ஆண்டு கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் 11ம் தேதி இரவு புறப்பட்டு, 12ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில், நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாநில நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி இடையூறு இல்லாமல்) 12.12.2024 வியாழக்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்தும், அதனை ஈடு செய்திடும் விதமாக எதிர்வரும் 21.12.2024 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்தும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
The post நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா.. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 12ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!! appeared first on Dinakaran.