×

மோசஸ் மினிஸ்ட்ரிஸ் காப்பக விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை!!

திருச்சி : மோசஸ் மினிஸ்ட்ரிஸ் காப்பக விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட். மனுதாரர்கள் வாதத்தின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில் 3 பிரிவுகளை மட்டும் நீக்கி ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் பொய்யான வாக்குறுதி அளித்து குழந்தைகளை தத்தெடுத்து பாலியல் தொல்லை தந்ததாக திருச்சி குட் ஷெப்பர்ட் மிஷன் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கிதியோன் ஜேகன், பாஸ்டர் கிதியோன் ஜேக்கப் மீது வழக்கு தொடரப்பட்டது.

குற்றச்சாட்டு அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது சிபிஐ. இந்த நிலையில், தங்கள் மீது சில பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இருவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட் கிளை, மனுதாரர் மீது 370, 467 மற்றும் 24 பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது.மேலும் 370ஏ, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post மோசஸ் மினிஸ்ட்ரிஸ் காப்பக விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை!! appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,Moses Ministries ,Trichy ,ICourt ,Madurai ,Dinakaran ,
× RELATED ராணுவ வீரரை தாக்கிய விவகாரம்...