×
Saravana Stores

வீட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு படிக்க அனுப்பினால் கல்லூரிக்கு கூட போகாமல் அடிதடியில் ஈடுபடுவதா? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வழக்கில் ஐகோர்ட் அதிருப்தி

திருத்தணி: சென்னை மாநில கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவன் சுந்தர், கடந்த அக்டோபர் 4ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டு, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 9ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் சந்துரு என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய மாணவர் சங்கம் மற்றும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு இடையேயான ஒற்றுமை வழங்குவது குறித்தான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர். காவல்துறை தரப்பில் வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக மாணவர்கள் மீது 22 வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் பதியபட்டுள்ளது.

மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டு வேலை செய்து மகனை படிக்க அனுப்புகிறார்கள். ஆனால், மாணவர்கள் கல்லூரிக்கு கூட செல்லாமல் அடிதடியில் ஈடுபடுகிறார்கள்.

இது வேதனையளிக்கிறது என்று கருத்து தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதி, உயர்கல்வி துறை செயலாளர் இணைத்து உத்தரவிடப்படுகிறது. மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் ரயில்வே போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து விசாரணையை 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post வீட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு படிக்க அனுப்பினால் கல்லூரிக்கு கூட போகாமல் அடிதடியில் ஈடுபடுவதா? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வழக்கில் ஐகோர்ட் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Pachaiyappan College ,Thiruthani ,Sundar ,Chennai State College ,Chennai Central Railway Station ,Rajiv Gandhi Government General Hospital ,
× RELATED மாநில கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற...