×

குன்றத்தூர் அருகே பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே பைக்கில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குன்றத்தூர், சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (48). இவர், பைக்கில் நேற்று வேலை விசயமாக பூந்தமல்லிக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து குன்றத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை, செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென கோபிநாத்தின் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் தாறுமாறாக ஓடியது.

இதில், தூக்கி வீசப்பட்ட கோபிநாத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குன்றத்தூர் அருகே பைக்கில் இருந்து விழுந்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kunradhur ,Kunradthur ,Gopinath ,Sekijhar Street, Kunradhur ,Kunradur ,Dinakaran ,
× RELATED லாரியின் குறுக்கே விழுந்து வாலிபர் தற்கொலை: வீடியோ வைரல்