×

வாடகைக்கு கார் எடுத்து விபத்து ஏற்படுத்தியதாக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மாமனாரிடம் பணம் பறிக்க முயற்சி: சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை

சென்னை: சர்வதேச செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த்தின் மாமனாரை வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு, வாடகை கார் எடுத்து விபத்து ஏற்படுத்தியதாக கூறி பணம் பறிக்க முயன்ற மர்ம நபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கோட்டூர்புரம் வெள்ளையன் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (81). தொழிலதிபரான இவர், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தின் மாமனார். இவரை கடந்த 18ம் தேதி வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர், நான் கர்நாடகா மாநில போலீஸ் என்றும், உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எடுக்கப்பட்ட வாடகை கார் ஒன்று பொதுமக்கள் கூட்டத்தில் சிக்கி விபத்து ஏற்படுத்திவிட்டது. இதனால் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர், என கூறி பேசியுள்ளார்.

அதற்கு ஆனந்த் மாமனார் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்த போதிலும், உங்கள் வங்கி உள்ளிட்ட விவரங்களை எனக்கு உடனே அளிக்க வேண்டும் என்று மர்ம நபர் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த் மாமனார், சம்பவம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்த போது, இது மோசடி நபர்களின் வேலை என தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து சென்னை பெருநகர கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆனந்த் மாமனார் புகார் அளித்தார். அதன்பேரில், சைபர் க்ரைம் போலீசார், மர்ம நபரின் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post வாடகைக்கு கார் எடுத்து விபத்து ஏற்படுத்தியதாக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மாமனாரிடம் பணம் பறிக்க முயற்சி: சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Viswanathan Anand ,Chennai ,Chennai Kotturpuram… ,Dinakaran ,
× RELATED செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மாமனாரிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட முயற்சி