×

லாரி மீது ஜீப் மோதி சென்னை வியாபாரிகள் 3 பேர் நசுங்கி பலி

வேலூர்: வேலூர் அடுத்த கருகம்பத்தூர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் சரக்கு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற ஜீப் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை தடுப்புச்சுவர் மீது மோதி சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் நொறுங்கியது. இதில் சென்னை தண்டையார்பேட்டை தமிழர் நகரை சேர்ந்த சவுபர்சாதிக் (33), அனீஸ்அலி (22), சென்னை, நீலாங்கரை சரஸ்வதி நகரை சேர்ந்த உஸ்மான் (35) ஆகியோர் பலியாகினர். சென்னை கொடுங்கையூரை சேர்ந்த அப்துல்மாலிக்(எ)மாலிக்பாஷா(35) படுகாயமடைந்தார். நண்பர்களான 4 பேரும் செருப்பு வியாபாரம் செய்பவர்கள் என்றும், மொத்தமாக செருப்பு வாங்குவதற்கு ஜீப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களூருக்கு 4 பேரும் மது போதையில் புறப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி மீது ஜீப் மோதி சென்னை வியாபாரிகள் 3 பேர் நசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : JEEP ,CHENNAI ,Vellore ,Chennai-Bengaluru National Highway ,Kargambattur ,Bangalore ,Dinakaran ,
× RELATED வேலூர் சதுப்பேரியில் இருந்து...