×

கடைகளில் பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்

மல்லசமுத்திரம், நவ.22: மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளிப்பட்டியில், நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் மூவேந்திரபாண்டியன் தலைமையில், அரசால் தடை செய்யப்பட்ட கேரிபேக், பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, பல்வேறு கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, கடை ஒன்றில் 16 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக் மற்றும் கப் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததுடன், கடைக்காரருக்கு ₹1000 அபராதம் விதித்தனர். இந்த ஆய்வின் போது, அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post கடைகளில் பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Kalipatty ,Mallasamutram Municipal Corporation ,Municipality Executive Officer ,Movendrapandian ,Dinakaran ,
× RELATED குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்