- விருத்தாச்சலம்
- விருத்தாசலம்
- கருவேப்பிலங்குறிச்சி
- துணை
- ஷங்கர்
- மற்றும் காவல்துறை
- kiranur
- பன்னீர்செல்வம்
- தின மலர்
விருத்தாசலம், நவ. 21: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், சி. கீரனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (55) என்பவர், தான் நடத்தி வந்த பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்குகளை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து சுமார் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை பாக்குகள் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்ததுடன் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புகையிலை பொருட்கள் விற்றவர் கைது appeared first on Dinakaran.