×
Saravana Stores

பயிர் காப்பீட்டை தனியார் வசம் கொடுப்பதை எதிர்த்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், நவ.21: பயிர்காப்பீட்டை தனியார்வசம் ஒப்படைக்கும் போக்கை ஒன்றிய அரசு கைவிடக்கோரி நாகையில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர்கள் சரபோஜி, சித்தார்த்தன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர்கள் பாபுஜி, அம்பிகாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மாசிலாமணி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாரிமுத்து ஆகியோர் பேசினர். பயிர்காப்பீட்டை தனியார் வசம் ஒப்படைக்கும் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். நிலம் ஒருங்கிணைப்பு சட்டம் 2013 மாநில அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

The post பயிர் காப்பீட்டை தனியார் வசம் கொடுப்பதை எதிர்த்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers union ,Nagapattinam ,Nagai ,Union government ,Aurithidal ,Tamil Nadu Farmers Association ,Sarabhoji ,Siddharthan ,Dinakaran ,
× RELATED நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக நிலம்...