கரூர், நவ. 21: கரூர் பெரியாண்டாங்கோயில் அருகே நின்று கொண்டிருந்தவர்களிடம் பைக்கில் வந்த மூன்று பேர் பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் பெரியாண்டாங்கோயில் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர், டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த 18ம்தேதி அன்று தனது சகோதரருடன் பெரியாண்டாங்கோயில் பிரதான சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், தங்களை மிரட்டி, ரூ.1200 மற்றும் இரண்டு செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர் என தெரிவித்திருந்தார். அதன்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கரூரில் சாலையோரம் நின்றிருந்தவர்களிடம் மிரட்டி ₹1200, 2 செல்போன்கள் பறிப்பு appeared first on Dinakaran.