×

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடங்கியதால் நீக்கம் தளவாய்சுந்தரத்துக்கு மீண்டும் செயலாளர் பதவி: எடப்பாடி அறிவிப்பு

நாகர்கோவில்: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தொடங்கி வைத்ததால், கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட தளவாய்சுந்தரம் எம்எல்ஏவுக்கு மீண்டும் அதே பொறுப்புகளை வழங்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுக அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி எம்எல்ஏவுமான தளவாய்சுந்தரம் கடந்த மாதம், நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அவரை தற்காலிகமாக நீக்கி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக, மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம் நியமிக்கப்பட்டார்.

அந்த பொறுப்புக்குவர முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்டோர் முயற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட காரணத்தால், உரிய விளக்கம் கேட்டு 8.10.2024 அன்று அவர் வகித்த பொறுப்புகளில் இருந்து தளவாய்சுந்தரம் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். அவர் வருத்தம் தெரிவித்து தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளதையடுத்து அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் அவர் மீண்டும் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் தளவாய்சுந்தரத்துக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என கூறி உள்ளார். இதனால் அவரது எதிர்கோஷ்டியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

The post ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடங்கியதால் நீக்கம் தளவாய்சுந்தரத்துக்கு மீண்டும் செயலாளர் பதவி: எடப்பாடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thalavaisundaram ,RSS ,march ,Edappadi ,Nagercoil ,Edappadi Palaniswami ,RSS march ,MLA ,AIADMK ,Kanyakumari ,Dalavaisundaram ,Dinakaran ,
× RELATED இந்தியர்கள் 3 குழந்தை பெற்று கொள்ள...