×

ஆவடி மாநகர காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பூவை பீ.ஜேம்ஸ் நியமனம்


திருவள்ளூர்: ஆவடி மாநகர சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக பூவை. பீ.ஜேம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரமாக தேர்தல் பணியை ஒருங்கிணைப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் பொறுப்பாளர்களை நியமனம் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ அறிவித்து வருகின்றார்.

இதன்படி, ஆவடி மாநகராட்சி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக திருவள்ளூர் தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் பூவை பீ.ஜேம்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை ஒருமனதாக நியமித்து கு.செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அறிவித்துள்ளார்.

The post ஆவடி மாநகர காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பூவை பீ.ஜேம்ஸ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : POOWAI P. James ,THIRUVALLUR ,POOWAI ,AVADI MUNICIPAL ASSEMBLY ELECTIONS ,B. James ,President ,Tamil Nadu Congress Committee ,Congress ,Tamil Nadu ,2026 Assembly elections ,Poowai P. ,Avadi Municipal ,James ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் மழையின்...