- டிஎன்எஸ்டிசி
- மத்திய அமைச்சர்
- நிதின் கத்கரி
- தில்லி
- திமுகா எம்.
- யூனியன் ஸ்டேட் ரோட்
- போக்குவரத்து
- அமைச்சர்
- நிதின் கட்ட்கரி
- கிருஷ்ணராஜன்
- தேசிய மின்சார பஸ் திட்ட
- நேப்
- பாராளுமன்ற
- தின மலர்
டெல்லி :கடந்த ஐந்து ஆண்டுகளில் TNSTC-க்கு எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை என்று திமுக எம்.பி. கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தேசிய எலக்ட்ரிக் பஸ் திட்டம் (NEBP) தொடர்பாக திமுக எம்.பி. ஆர்.கிரிராஜன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த ஒன்றிய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மின்சார வாகனங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக PM-eBus சேவா மற்றும் PM e-Drive போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாநில போக்குவரத்து கழகங்கள் இந்த உதவிக்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அல்லது கனரக தொழில்கள் அமைச்சகத்திற்கு முன்மொழிவுகளை அனுப்பலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் அரசு, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களால் 10677 மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒன்றிய அரசு நிதி உதவி ஏதும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா? என்று கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, TNSTC-க்கு கடந்த 5 ஆண்டுகளில் நிதியுதவியாக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
The post TNSTC-க்கு கடந்த 5 ஆண்டுகளில் நிதியுதவியாக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பதில் appeared first on Dinakaran.