×
Saravana Stores

சுயமரியாதையை கற்றுத்தந்த முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின்தான் இருக்கிறார் மன்னிப்பு கேட்க திமுகவில் யாரும் சவார்கர் இல்லை: பாமகவுக்கு திமுக காசிமுத்து மாணிக்கம் பதிலடி

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பகுதி செயலாளரும், எம்எல்ஏவுமான அரவிந்த ரமேஷ் முன்னிலை வகித்தார். 189வது வட்ட தி.மு.க. செயலாளரும், சென்னை பெருநகர் மாநகராட்சி கணக்கு குழு உறுப்பினருமான பாபு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமை சிறப்பு பேச்சாளராக திமுக தலைமை வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: என் தந்தையை, அவருக்கு வேலை இல்லை என்று கூறியதற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 2006ல் பாமகவினால்தான் கலைஞர் முதல்வராக நீடித்தார் என்றும் கூறியிருக்கிறார் அன்புமணி.

அவசரமாக வெளியே சென்ற ஒருவனை தடுக்க அவுங்க அம்மா, டேய் உங்க தாத்தா ஏதோ வேலைன்னு கூப்பிடுகிறார்டா என்னவென்று கேட்டுட்டு போடா என்றார். மகனோ, ‘அடப்போம்மா.. அவரு ஏதாவது வேலையில்லாம் சொல்லிக்கிட்டே இருப்பாரு நான் போறேன் வெளியில் விளையாட’ என்று கூறுவதுபோல் தாத்தா ஸ்தானத்தில் ராமதாஸை வைத்து கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதில் எங்கே ஆணவம் வந்தது. 2006ல் பாமக தயவில் தான் கலைஞர் முதல்வராக நீடித்தாராம். தார்பாயில் வடிகட்டிய பொய்யினை கூறுகிறார். எருமை ஏரோ பிளான் ஓட்டிய கதையாய் அளக்கிறார்.

2019ல் மகராஷ்டிராவில் தேர்தலுக்கு முன்பு எதிரே நின்ற சரத்பவார் காங்கிரசும், காங்கிரசும், உத்தவ் தாக்ரே முதல்வராவதற்கு உதவி செய்தார்களே அதான் உதவி. ஆனால் 2006ல் பாமக திமுக தலைமையிலான கூட்டணியில் தான் இருந்தது. திமுக நிற்கும் போதே மிககுறைவாக உதயசூரியனில் 132லிலும், திமுக வேட்பாளர் 119 பேருமாக நின்றோம். நிற்கும்போது கூட்டணிகளுக்கு சீட் அதிகமாக கொடுத்தோம். அவர்களும் முன்பு கொடுத்த வாக்குப்படி தேர்தல் முடிந்து ஆட்சிக்கு ஆதரித்தனர். அந்த தேர்தலில் திமுக நின்றதே 200வது நின்றிருக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. தமிழகத்தில் திமுக 96. ஏதோ பாமக 18ல் தான் கலைஞர் ஆட்சி அமைந்தது என கூறுவது மன வேதனை தருகிறது. 2014ல் 3வது அணியாக நின்று ஒற்றை சீட்டில் அன்புமணி வென்றும் கூட அமைச்சராகவில்லை. ஆனால், 2006ல் ஒரு எம்பிக்கூட இல்லாமல் உங்களை அமைச்சராக்கிவிட்டு, சில வாரங்கள் கழித்து 18 பாமக எம்எல்ஏக்களுடன், திமுக 15 எம்எல்ஏ ஆதரவு தந்து எம்பியாக்கி முதல்வருக்கு சமமான காபினெட் அமைச்சர் பெற்று தந்தவர் கலைஞர். அந்த நன்றியை மறக்கலாமோ? சுயமரியாதையை கற்றுத்தர முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின்தான் இருக் கிறார். மன்னிப்பு கேட்க திமுகவில் யாரும் சவார்கர் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

The post சுயமரியாதையை கற்றுத்தந்த முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின்தான் இருக்கிறார் மன்னிப்பு கேட்க திமுகவில் யாரும் சவார்கர் இல்லை: பாமகவுக்கு திமுக காசிமுத்து மாணிக்கம் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Stalin ,Mutuel Karunanidhi ,Dimugh ,Dimuka Kashimuthu Manikam ,Bamgaon ,Chennai ,Dimuka ,MLA ,Arvinda Ramesh ,Roundabout ,M. K. Babu ,Chennai Metropolitan Municipal Accounts Committee ,Bamakawa ,
× RELATED இயற்கை சீற்றத்தின் பாதிப்புகளை...