×
Saravana Stores

டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் கைலாஷ் கெலாட். இவர் டெல்லி அரசின் போக்குவரத்து, சட்டம் மற்றும் வருவாய் துறை அமைச்சராக இருந்தவர். இந்நிலையில் அவர் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘டெல்லி அரசு தனது பெரும்பாலான நேரத்தை ஒன்றிய அரசுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தால், டெல்லியில் வளர்ச்சியை காண முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இன்னும் ஆம்ஆத்மி கட்சியை நம்பிக் கொண்டிருக்க முடியாது என்பதால் ஆம் ஆத்மி கட்சியி ன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அமைச்சர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்’ என்று கூறியுள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அமைச்சர் திடீரென ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Delhi ,Minister ,New Delhi ,Aam Aadmi Party ,Kailash Gehlot ,Minister of Transport, Law ,and Revenue, Government of Delhi ,National Coordinator ,Arvind Kejriwal ,Dinakaran ,
× RELATED டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா: ஆம்ஆத்மி கட்சியில் இருந்தும் விலகல்