×
Saravana Stores

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு ரூ.11850.68 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு: கலெக்டர் தகவல்

 

ராமநாதபுரம், நவ. 13: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு ரூ.11850.68 கோடி வங்கிகள் கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடப்பு நிதி ஆண்டிற்கான வங்கிக்கடன் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்டு வங்கி மற்றும் மாவட்ட அனைத்து வங்கிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடப்பு நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தயாரித்தது.

அதனை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட இந்திய ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் ஸ்ரீதர் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் கூறும்போது: கடன் திட்ட அறிக்கையில் முன்னுரிமைக் கடன்களுக்கு அதிக தொகையானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேளாண் துறைக்கு ரூ.10583 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையானது கடந்த ஆண்டு இலக்கை விட 46.87 % அதிகமாகும்.

மேலும் சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.894.97 கோடி , வீட்டுக்கடன் ரூ.65.18 கோடி , கல்விக்கடன் ரூ. 24.96 கோடி, சமூக உள்கட்டமைப்புக்கு ரூ. 1.48 கோடி இதர கடன்களுக்கு ரூ.101.19 கோடி, முன்னரிமை அல்லாத கடன் ரூ.179.9 கோடி என மொத்தம் ரூ.11850.68 கோடி கடன் திட்ட அறிக்கையானது தயார் செய்யப்பட்டுள்ளது. இதே போல் சென்ற நிதியாண்டில் (2023-24) ரூ.11022.83 கோடி கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ரூ.11,999.69 கோடி வங்கிகளால் வழங்கப்பட்டு 100.88% இலக்கு அடையப் பெற்றது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார், இந்திய ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஸ்ரீதர் மற்றும் ஐ.ஓ.பி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ராஜரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு ரூ.11850.68 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram District ,Ramanathapuram ,Ramanathapuram Collectorate ,Simranjeet Singh… ,Dinakaran ,
× RELATED தொழில் தொடங்க கடனுதவி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்