×
Saravana Stores

தொழில் தொடங்க கடனுதவி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம், நவ.15: ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது, ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற தமிழக அரசின் சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் வியாபாரத் தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கி கடன் உதவி பெறலாம். இத்திட்டத்தின் மூலம் திட்ட மதிப்பீட்டில் 25% அரசு மானியம், அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 45 வயதிற்குள்ளும், சிறப்பு பிரிவினருக்கு 18 வயது முதல் 55 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் (பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்). ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டத்தில் கடன் உதவி பெற விரும்பும் இளைஞர்கள் www.msmeonline.tn.gov.in/uvegp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை (தொலைபேசி எண் 04567-290459 அலைபேசி எண்: 89255 33983, 89255 33984) தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post தொழில் தொடங்க கடனுதவி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Collector ,Simranjeet Singh Kalon ,Ramanathapuram District Industrial Center ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்