×
Saravana Stores

ஏர் இந்தியா – விஸ்தாரா இணைப்பு முழுமையாக முடிவடைந்தது: விமான சேவையில் டாடா ஆதிக்கம்

புதுடெல்லி: டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்சின் கூட்டு நிறுவனமாக விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. இதனை ஏர் இந்தியா குழுமத்துடன் இணைக்கும் பணிகள் சமீபகாலமாக நடந்து வந்தது. தற்போது இப்பணிகள் முழுமையாக முடிவடைந்திருப்பதாக ஏர் இந்தியா நேற்று அறிவித்தது. இனி விஸ்தாரா விமானங்கள் ஏர் இந்தியா விமானங்களாக வானில் பறக்கும்.

கடந்த 2022 ஜனவரியில் நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா குழுமம் வாங்கியது. அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 1ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏஐஎக்ஸ் கனெக்ட் (முன்பு ஏர் ஏசியா இந்தியா) விமான நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தற்போது ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா ஏர்லைன்சும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய விமான போக்குவரத்து துறையில் டாடா குழுமம் ஆதிக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

The post ஏர் இந்தியா – விஸ்தாரா இணைப்பு முழுமையாக முடிவடைந்தது: விமான சேவையில் டாடா ஆதிக்கம் appeared first on Dinakaran.

Tags : Air India ,Vistara ,Tata ,New Delhi ,Vistara Airlines ,Tata Group ,Singapore Airlines ,
× RELATED ஏர் இந்தியா – விஸ்தாரா விமான நிறுவனங்களின் இணைவு வெற்றி..!