×
Saravana Stores

மணிப்பூரில் வன்முறை அதிகரிப்பு; ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் மீண்டும் அமல்: ஒன்றிய அரசு நடவடிக்கை

இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் செயல்பட வசதியாக ஜிரிபாம் உள்பட 6 போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள் கலவர பகுதி என அறிவிக்கப்பட்டு ஆயுத படைகள்(சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மெய்டீஸ் மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மாநிலத்தில் அமைதி திரும்பி வந்த நிலையில், பாதுகாப்பு படையினர், பொதுமக்களை குறிவைத்து குகி பழங்குடியினத்தை சேர்ந்த சில தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடந்து வருவதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் வன்முறைகள் நடந்து வந்ததால் கடந்த மாதம் மாநிலத்தில் உள்ள 19 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளை தவிர மீதி உள்ள இடங்களில் ஆயுத படைகள்(சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தியது. மாநிலத்துக்கு கூடுதலாக 20 கம்பெனி ஒன்றிய துணை ராணுவத்தினரையும் அனுப்பி உள்ளது. வன்முறை சம்பவங்கள் அதிகம் நடந்து வரும் ஜிரிபாம் உள்பட 6 போலீஸ் நிலைய பகுதிகள் கலவர பகுதியாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் செயல்பட வசதியாக ஆயுத படைகள்(சிறப்பு அதிகாரங்கள்)சட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

The post மணிப்பூரில் வன்முறை அதிகரிப்பு; ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் மீண்டும் அமல்: ஒன்றிய அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Union Government ,Jiribam ,Meidis ,Government ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்:...