×
Saravana Stores

டெல்லி மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியை கடந்த 2022ம் ஆண்டு, டிசம்பரில் நடந்த தேர்தலில் பாஜ.விடம் இருந்து ஆம் ஆத்மி கைப்பற்றியது. டெல்லி மாநகராட்சியின் சட்டப்படி, மேயர், துணை மேயர் பதவிகள் ஆண்டுக்கொரு முறை நடத்தப்படும். 2023ம் ஆண்டு நடைபெற்ற இதற்கான தேர்தலில் ஆம் ஆத்மியை சேர்ந்த ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான 3ம் ஆண்டு தேர்தல் 7 மாத தாமதத்திற்குபிறகு நேற்று மதியம் 2 மணிக்கு நடந்தது.

இதில், ஆம் ஆத்மியை சேர்ந்த மேயர் வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி, பாஜ வேட்பாளர் கிஷண் லாலை 3 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கிச்சிக்கு 133 வாக்குகளும், கிஷண் லாலுக்கு 130 வாக்குகளும் கிடைத்தன. 2 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 8 கவுன்சிலர்களை கொண்ட காங்கிரஸ், இத்தேர்தலை புறக்கணித்தது.

The post டெல்லி மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi Party ,Delhi Mayoral elections ,New Delhi ,Delhi Municipal Corporation ,BJP ,Corporation of Delhi ,Mayor ,Delhi Mayoral election ,Dinakaran ,
× RELATED டெல்லி பாஜ மூத்த தலைவர் ஆம் ஆத்மியில் சேர்ந்தார்