×
Saravana Stores

உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வருமா?.. புதினுக்கு நேரடியாக போன் போட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இருப்பினும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே தான் வெற்றி பெற்றால் உக்ரைன்-ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடித்துவிடுவேன் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் டொனால்டு டிரம்ப், உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் அண்மையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் பேசியிருந்தார்.

இந்நிலையில் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தொலைபேசி வாயிலாக நடைபெற்ற இந்த உரையாடலின் போது, உக்ரைன் உடனான போரை தீவிரப்படுத்த வேண்டாம். போரை கைவிட வேண்டும் என புதினை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பின் இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ற எதிபார்ப்பும் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

The post உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வருமா?.. புதினுக்கு நேரடியாக போன் போட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,US PRESIDENT TRUMP ,MINT ,Washington ,Trump ,US ,Ukraine-Russia War ,-Russia ,Dinakaran ,
× RELATED ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த...