மாஸ்கோ: உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா வீசியது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராணுவ மற்றும் ஆயுத உதவி வழங்கி வருகின்றன. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நீண்டதூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளார். அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணையை பயன்படுத்த உக்ரைனுக்கு அந்தாட்டு அனுமதி அளித்ததற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய புதின் ஒப்புதல் அளித்துள்ளார். பரபரப்பான இந்த சூழலில், அமெரிக்காவில் தயாரான நீண்டதூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணையை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் நாட்டின் நிப்ரோ நகர் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. போர் தொடங்கி 1,000 நாட்களை கடந்த நிலையில் RS-26 ஏவுகணையை ஏவி உக்ரைன் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய வல்லமை பெற்றது ரஷ்யாவின் RS 26 ஏவுகணை. அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் கொடுத்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பது உச்ச கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிப்ரோ நகரில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தாக்கியதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து 8 ஏவுகணைகள் வீசப்பட்டதில் 6 ஏவுகணைகளை தகர்த்து விட்டதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும் இதனால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து உக்ரைன் தரப்பு இதுவரை தெளிவாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
The post உக்ரைனை தாக்கிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்.. மிரட்டும் ரஷ்யா.. தீவிரமடையும் போர் appeared first on Dinakaran.