- தமிழ்நாடு அரசு
- மதுரை
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- நாயக்கர்பட்டி
- மதுரை மாவட்டம்
- மேலூர்
- யூனியன் அரசு
- இந்துஸ்தான் துத்தநாக நிறுவனம்
- தின மலர்
சென்னை: மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் சுமார் 2000 ஹெக்டேரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இதையடுத்து தமிழ்நாடு அரசிற்கு ஒன்றிய அரசு அளித்த அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏதும் பெறப்படவில்லை எனவும் மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதி பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்க கூடாது என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிகையில்; “ஒன்றிய அரசால் 24.06.2024-ல் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டு 07.11.2024 அன்று இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தினை தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அந்நிறுவனத்திடமிருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை எனவும். அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது”.
The post மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.