சென்னை: இசை விருதுகளில் உயரிய விருதான ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது. ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான் சார்பில் இயக்குநர் பிளெஸ்ஸி பெற்றுக் கொண்டார்.
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்), பிளஸ்ஸி ஐப் தாமஸ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், பிருத்விராஜ், அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் திரைப்படமாக உருவானது. இப்படம் உலகளவில் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் பின்னணி இசை அனைவராலும் பாராட்டப்பட்டது.
இதையடுத்து ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருதுக்கு (HMMA) ஆடுஜீவிதம் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் . அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற விழாவில் இன்டிபென்டென்ட் ஃபிலிம் (Foreign Language) பிரிவில் பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை ஏ.ஆர்.ரகுமான் சார்பில் இயக்குநர் பிளெஸ்ஸி பெற்றுக் கொண்டார்.
மேலும் விருது பெற்றது குறித்து இயக்குனர் பிளெஸ்ஸி தெரிவித்துள்ளதாவது; “2024 ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருதுகளில் (HMMA) சிறந்த பின்னணி இசைக்கான (வெளிநாட்டு மொழி) விருதை ஆடுஜீவிதம் – தி கோட்லைஃப் வென்றுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேடையில் இந்த அங்கீகாரத்தைப் பெற்றது ஒரு சிறப்பு தருணம். அசாத்திய திறமையான ஏ.ஆர்.க்கு நன்றி. அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நாங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
The post ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது appeared first on Dinakaran.