×

கோரிக்கைகளை வலியுறுத்தி எம்ஆர்பி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

 

தூத்துக்குடி, நவ. 5: தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு எம்ஆர்பி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி செவிலியர் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவு பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அமராவதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இன்பென்டா கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க துணைப் பொதுச்செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு, மாவட்ட செயலாளர் முருகன், வட்ட தலைவர்கள் பீட்டர், அன்னம்மாள், வட்ட செயலாளர் திருமலை, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனிதா நன்றி கூறினார்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி எம்ஆர்பி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : MRP ,Thoothukudi ,Thoothukudi taluk ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி விமான நிலையத்தில்...